பக்கங்கள்

Search for quotes

Search for quotes...

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

இலக்கும் - வழியும்

     இலக்கை விரும்புவோன் அதற்குச் செல்லும் வழிவகையையும் விரும்புவான்.



     Those who like the goal will also love the way to it.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

நம்புபவனும் - நம்பாதவனும்

     முடியம் என்று நம்புபவன் முடித்துக்காட்டுவான், நம்பாதவன் கெடுவான்.



     He who believes that it is possible will finish, and he who does not believe will perish.

சனி, 29 ஆகஸ்ட், 2020

அழகும் - ஆனந்தமும்

     அழகிய பொருள் என்றும் ஆனந்தம் அளித்திடும், ஆனால் அழகு என்றும் நிலைத்திருக்காது.



     Beautiful material will always bring happiness, but beauty does not last forever.

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்

     எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை.



     He was not disappointed as he did not expect anything.

உலகமும் - நிரந்தரமும்

     இந்த உலகில் யாருக்கும் நிரந்தரமானது என்று எதுவும் இல்லை.



     There is nothing that is permanent for anyone in this world.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சனி, 22 ஆகஸ்ட், 2020

சொல்லும் - போரும்

     செல்வன் சொல்லுக்கு அஞ்சான், வீரன் போருக்கு அஞ்சான்.



     Rich is not afraid of the word, warrior is not afraid of war.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

காலமும் - அருமையும்

     காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்கமாட்டார்.



     He who knows the rarity of time will not waste it.

பணமும் - குணமும்

     பணம் பார்த்துப் பண்டம் கொள், குணம் பார்த்து பெண்ணைக் கொள்.



     Look at the money and buy the goods, look at the character and take the woman.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ரூபாயும் - பைசாவும்

     பைசாவைக் கவனித்துக் கொள், ரூபாய்கள் தானாகக் கவனித்துக் கொள்ளும்.



     Take care of the penny, the rupee will take care of automatically.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

பயமும் - துயரமும்

     பணம் வைத்திருந்தால் பயம், இல்லாதிருந்தால் துயரம்.


     Fear if you have money, misery if you don't.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பணமும் - தீமையும்

     பணத்தின் மேல் ஆசை எல்லா தீங்குகளுக்கும் ஆணிவேர்.



     The desire for money is the root of all evil.

சனி, 15 ஆகஸ்ட், 2020

இனிமையும் - அழகும்

     உங்களின் இனிய இயல்பே உங்கள் உள்ளத்திற்கு அழகாகும்.



     Your sweet nature is beautiful to your soul.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பசியும் - தூக்கமும்

     பசி சுவை அறியாது, தூக்கம் சுகமறியாது.



     Hunger does not taste, sleep does not feel good.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அடக்கமும் - நற்குணமும்

     அடக்கம் ஒரு ஆபரணம் மாத்திரமல்லாமல் , நற்குணத்தின் ஒரு காவலன்.



     Burial is not only an ornament, but a guardian of virtue.

புதன், 12 ஆகஸ்ட், 2020

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

ஆரம்பமும் - முடிவும்

     ஆரம்பத்தில் எண்ணிப் பார்க்காதவன் முடிவில் பெருமூச்சு விடுகிறான்.



     The one who does not think at the beginning sighs at the end.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

சனி, 8 ஆகஸ்ட், 2020

கடுமையும் - பலவீனமும்

     கடுமையான வார்த்தைகளைக் கொட்டுவதில் நம் பலவீனம் வெளிப்படும்.



     Our weakness is manifested in the utterance of harsh words.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஆர்வமும் - சாதித்தலும்

     எந்த ஒரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.



     No great thing can ever be achieved without enthusiasm.

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

உணர்ச்சியும் - ஆத்மாவும்

     உணர்ச்சியை அடக்கினால் ஆத்மாவின் பலம் அதே விகதாம்சத்தில் வளர்கிறது.


     The strength of the soul grows at the same rate when the emotion is suppressed.

புதன், 5 ஆகஸ்ட், 2020

வாழ்நாளும் - வீணடிப்பதும்

     வாழ்நாள் குறைவு தான், காலத்தை வீணாக்கி அதை மேற்கொண்டு குறைக்கிறோம்.


     Lifespan is short, wasting time and further reducing.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

ஏழையும் - விருப்பமும்

     கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல, அதிகம் விரும்புபவனே ஏழை.


     He who has little is not poor, but he who loves more is poor.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தாமதமும் - முன்னதாகவும்

     ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது.


     It is better to be three hours earlier than a minute late.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஊமையும் - மொழியும்

     அன்பு என்ற பாஷையை ஊமைகள் பேச முடியும்.


     Dumb people can speak the language of love.

சனி, 1 ஆகஸ்ட், 2020

அன்பும் - உணர்ச்சியும்

     அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சி கடல்.


     Love is an emotional sea completely surrounded by costs.